மைதா மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாமல் கருப்பட்டி மற்றும் கோதுமை மாவில் சுவையான மிகவும் ஆரோக்கியத்திற்கு சிறந்த கருப்பட்டி கப் கேக் செய்யலாம் வாருங்கள்.
இனி 👫 குழந்தைகளுக்கு கடையிலுள்ள அதிகமாக கெமிக்ல் கலர்கள் நிறைந்த கேக் வாங்கி கொடுக்க வேண்டிய அவசியமில்லை அதைவிட சுவையான கருப்பட்டி கேக் வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். மைக்ரோ ஒவன் கூட தேவையில்லை குக்கரிலேயே செய்யலாம்.
Video in palm jaggery cake (karuppatti cake ) :https://www.youtube.com/watch?v=CR3S9WggXcM
தேவையான பொருட்கள் :
கருப்பட்டி (பனைவெல்லம்) - 1 கப்
கோதுமை மாவு - 1 1/4 கப்
முட்டை - 2
வெண்ணெய் - 100 கிராம்(unsalted)
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 மேஜைகரண்டி (unsweetened)
பால் - 1/2 கப்
டீ கப் - தேவைக்கேற்ப
பாதாம் பருப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கருப்பட்டியை 1/4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் விடாமல் பனைவெல்லம் கரையும் வரை கலக்கவும். கருப்பட்டி முற்றிலும் கரைந்த பின் சூடாக இருக்கும் போதே மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும். கண்டிப்பாக வடிகட்டிக் கொள்ளவும் ஏனென்றால் கருப்பட்டியில் தூசி மண் இருக்கும்.
டீ கப்பின் உள்ளே வெண்ணெயை தடவி வைக்கவும். பிரஸ் இருந்தால் உபயோகிக்கவும் அல்லது கையாலே வெண்ணையை தடவி கேக் செய்ய வேண்டிய எல்லா டீ கப்பையும் ரெடி செய்து வைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு செய்வதால் கேக் கப்பில் ஒட்டாமல் சுலபமாக எடுக்க முடியும்.
வெண்ணெயை ஃப்ரிஞ்லிருந்து எடுத்து ரூம் டெம்ரேச்சர் வரும்வரை வைத்து பின் மிகவும் குறைவான தீயில் உருக்கிக் கொள்ளவும். வெண்ணெய் உருகினால் போதும் அதிகமாக சூடு செய்ய வேண்டாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்த ஊற்றி ஸ்பூன் அல்லது விஸ்க் உதவிவுடன் நன்றாக நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

நன்றாக முட்டையை அடித்த பின்பு அதனுடன் உருக்கி வைத்துள்ள வெண்ணெயை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்பு பால் மற்றும் கருப்பட்டி சிரப் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதில் பாதாம் பருப்பு அல்லது டியூடி ஃப்ரூட்டி உங்கள் விரும்பம்போல் ஏதாவது ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.

நன்றாக கலந்த பின்னர் சல்லடை அல்லது வடிகட்டியில் போட்டு ஏற்கனவே கலந்துள்ள கலவையில் சேர்க்கவும்.
இந்த கலவையை அடித்து கிளர வேண்டாம் மிகவும் மென்மையாக கலந்து விடவும்.
படத்தில் உள்ளது போல் பதத்தில் இருக்க வேண்டும்
இப்பொழுது கரண்டியால் வெண்ணெய் தடவிய டீகப்பில் முக்கால் பாகத்திற்கு மட்டும் நிரப்ப வேண்டும்.
அகலமான குக்கரில் ஒரு அலுமினிய தட்டு அல்லது ஸ்டான்டு போடவும். பின்பு கேக் நிரப்பியுள்ள டீக்கப்புகளை ஒவ்வென்றாக வைக்கவும்.
தோல் நீக்கிய பாதாம் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் முந்திரி திராட்சை எதுவேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
குக்கரில் உள்ள விசில் மற்றும் கேஸ்கட்டை மறக்காமல் நீக்கிவிட வேண்டும்.
இப்பொழுது குக்கரை மூடி வைக்கவும். அடுப்பை மிகவும் குறைவான தீ வைக்கவும். இது வேகுவதற்கு குறைந்தது 35 நிமிடத்திலிருந்து 45 நிமிடங்கள் ஆகும். மிகவும் சிறிய வகை டீகப் எடுத்துள்ளதால் 35 நிமிடத்தில் கேக் ரெடி ஆகிவிடும்.
உங்களிடம் மைக்ரோ ஒவன் இருந்தால் அதில் 180 டிகிாி 35 நிமிடங்கள் வைக்கவும். மிகவும் சிறிய வகை டீகப் என்றால் 15 நிமிடங்கள் வைத்தாலே போதும். ஓவன் முன் சூடு செய்யவில்லை (oven no preheat)
35 நிமிடத்திற்கு பின் குக்கரை திறந்து கம்பியை கேக்கில் விட்டு எடுத்து பார்த்தால் கம்பியில் கேக் ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வெந்திருக்கும். கம்பியில் கேக் ஒட்டியிருந்தால் மேலும் சிறிது நேரம் வேகவைக்கவும்.
😋😋😋சுவையான கப் கேக் ரெடி!!!! சந்தோஷமாக சாப்பிட்டு மகிழலாம்!!!!!1
Video in karuppatti cup cake : https://www.youtube.com/watch?v=CR3S9WggXcM
1 கருத்துகள்
Very Useful information. Thanks for sharing this article
பதிலளிநீக்குRead More Article
Very nice blog about Tamil quotes
Read more Tamil Quotes