தேவையான பொருட்கள் :
பன்னீர் - 100 கிராம்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
முந்திரி - 10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 14
பூண்டு பல் - 3
கிராம்பு, பட்டை, இலை - சிறிதளவு
பட்டர் - 1 மேசைகரண்டி
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
- முந்திரியை ஒரு அரைமணி நேரம் ஊறவைத்து பின் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும். தக்காளியையும் விழுதாக அரைக்கவும்.
- வெங்காயம், பூண்டு இரண்டையும் நன்றாக பொடி பொடியாக வெட்டவும். பன்னீரை சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கவும்.
- ஒரு கடாயில் சிறிது பட்டர் போட்டு பன்னீரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் மிதமுள்ள பட்டர் மற்றும் எண்ணெய்யிட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிரமாக வந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்ட், கிராம்பு, இலை, பட்டை, தக்காளி விழுது , உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கவும்.
- பின் முந்திரி பேஸ்ட் போட்டு ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து இறக்கவும்.
இந்த மசாலாவை சப்பாத்தி, நாண் மற்றும் புல்காவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
0 கருத்துகள்