குருமா குழம்பு

தேவையான பொருட்கள் :


உருளை கிழங்கு - 2
பட்டாணி - 1 மேசைகரண்டி
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
தேங்காய் துருவல் - 1/4 கப்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
பெரியவெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை இலை, கிராம்பு, கசகசா - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :


  • வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக வெட்டவும்.  பச்சைமிளகாயை  கீறி வைக்கவும்.
  • தேங்காய், பொட்டுக்கடலை, இரண்டு பச்சைமிளகாய்  , சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
  • உருளைகிழங்கு, பட்டாணி, உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து இறக்கவும். உருளைகிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு பட்டை, கிராம்பு, கசகசா போட்டு தாளிக்கவும். வெங்காயம் போட்டு வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசணை போக வதக்கவும்.
  • பின் தக்காளி உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் உருளைகிழங்கு பட்டாணி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.






 

கருத்துரையிடுக

0 கருத்துகள்