பால் பனியாரம்





தேவையான பொருட்கள் :


உளுந்து  -  1 கப் 
அரிசிமாவு - 2 டீஸ்பூன்
தேங்காய்  -  1
ஜீனி  -  1 கப்
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு
ஏலக்காய்த்தூள்  -  1 டீஸ்பூன்

செய்முறை :


  • உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பூக்க அரைக்கவும்.  பின் அரிசிமாவு, உப்பு சேர்த்து  வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
  • தேங்காய் துருவி 3 கப் பால் எடுத்து அதனுடன் ஜீனி சிறிதளவு உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து வைக்கவும்.
  • பின் ஒரு வாணலியில் எண்ணெயிட்டு மிதமான தீயில் வைத்து சிறிது சிறதாக கிள்ளி போட்டு பொரித்து தேங்காய் பாலில் போட்டு ஊறவைத்து சாப்பிடவும்.
 சுவையானது, ஆரோக்கியமானது எளிதில் செய்யகூடியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்