பரங்கிக்காவில் அதிக அளவு நார்சத்து உள்ளது அதனால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். பரங்கிக்காய் வாயு தொந்தரவு, அல்சர் மற்றும் செரிமான கோளாறு ஆகியவற்றை சரி செய்கின்றது. சளி மற்றும் காய்ச்சலை போக்கவும் இது பெரிதும் உதவியாக உள்ளது.
இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த பரங்கிக்காயை பொரியலாக, கூட்டாக, குழம்பில் சேர்த்து சாப்பிடுவோம் ஆனால் இன்று அடை தோசையாக செய்ய போகின்றோம் மிகவும் சுவையாக இருக்கும்.
நாம் இந்த பருப்பு அடையில் பரங்கிக்காய் சேர்த்துள்ளதே தெரியாது ஆனால் சுவையாக இருக்கும்.
1. முதலில் இட்லி அரிசியையும் , கடலைப்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 அல்லது 3 முறை நன்றாக அலசிக்கொள்ளவும்.
2. நன்றாக அலசிய பின் தண்ணீரை வடிக்கட்டிக் கொள்ளவும். பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
3. இதனை குறைத்தது 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
4. நான்கு மணி நேரத்திற்கு பின் அரிசியும் பருப்பும் நன்றாக ஊறி இருக்கும். இப்பொழுது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
குறைவான அளவு உள்ளதால் மிக்ஸியிலேயே அரைத்துக் கொள்ளலாம் அதிகமான அளவு எடுத்தால் கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
5. முதலில் மிக்ஸியில் பட்டைமிளகாய் மற்றும் சோம்பு சேர்க்கவும்.
6. இதனுடன் அரிசியை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி சேர்க்கவும்.
7. ஊறவைத்த தண்ணீரியிலிருந்து 1/2 கப் தண்ணீர் மட்டும் சேர்க்கவும்.
8. இதனை சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ( மிகவும் நைசாக அரைக்க கூடாது அதேபோல் மிகவும் கரகரப்பாகவும் அரைக்க கூடாது )
9. இதுபோல் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
10. இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
11. பின் பரங்கிக்காய்யை தோல் நீக்கவும். (இதனுடைய தோல் மிகவும் கடினமாக இருக்கும் அதனால் பார்த்து செதுக்கி கொள்ளுங்கள்.
12. தோல் நீக்கிய பின் நன்றாக அலசி எடுக்கவும். பின் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
13. நறுக்கிய துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் அரிசி ஊறவைத்த தண்ணீரை 1/2 கப் சேர்க்கவும்.
14. இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக நைசாக அரைத்து எடுக்கவும்.
15. அரைத்த பின் அதனை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.
16. மஞ்சள்த்தூள் சேர்த்து நன்றாக மாவை கலந்துக் கொள்ளவும்.
17. ஒரு மேஜைகரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கவும். அடுப்பை கண்டிப்பாக மிகவும் குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.
18. 5 நிமிடத்திற்கு பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கருவேப்பிலை சேர்த்து ஒருமுறை கலந்து பின் அதனை மாவுடன் சேர்க்கவும்.
19. இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இப்பொழுது அடை தோசை மாவு ரெடியாக உள்ளது அடை சுட்டு கொள்ளலாம்.
20. தோசை கல் சிறிது சூடான உடன் 1 1/2 கரண்டி மாவு சேர்த்து அடை தோசை மெலிசாக ஊற்றிக் கொள்ளவும்.
21. அடை ஓரங்களில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் சேர்த்து அடை சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அடுப்பை மிகவும் குறைவாக தீயில் வைத்து வேகவைக்வும்.
22. 3 நிமிடத்திற்கு பின் அடை தோசையை திருப்பி போட்டு மீண்டும் 3 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும்.
23. இப்பொழுது அடை நன்றாக வெந்திருக்கும் எடுத்துக் கொள்ளலாம். இதே போன்று மீதமுள்ள அடை தோசைகளையும் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
24. இந்த அடை தோசையுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி மற்றும் நாட்டு சர்க்கரையுடன் வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
0 கருத்துகள்