வெள்ளை சோள மாவில் சப்பாத்தி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக வடஇந்திய மக்கள் இந்த சோள மாவில் சப்பாத்தி, தோசை போன்ற வகைகள் அதிகமாக செய்து சாப்பிடுவார்கள் ஆனால் நாம் இந்த சோளத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை இதில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது அதனால் கண்டிப்பாக நாமும் நம் உணவில் எடுத்துக் கொள்ளலாம். நாம் இன்று இந்த மாவில் தோசை செய்ய போகின்றோம் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளை சோளம் - 1 கப் (250ml)
இட்லி அரிசி - 1/2 கப்
வெள்ள உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் சோளம் மற்றும் இட்லி அரிசியை சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசி கொள்ளவும்.
நன்றாக அலசிய பின் தண்ணீர் சேர்த்து குறைந்தது 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். (நன்றாக ஊறவைத்தால் அரைப்பதற்கு சுலபமாக இருக்கும்.)
உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் நன்றாக அலசிய பின் தண்ணீர் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைத்தால் போதும். ( அரைப்பதற்கு 2 மணிநேரத்திற்கும் முன் உளுந்தை ஊற வைத்தால் போதும் அதிக நேரம் உளுந்து ஊறவைக்க தேவையில்லை. )
அரிசி மற்றும் உளுநத்து ஊறிய பின் மிக்ஸி போட்டு தனிதனியாக நன்றாய நைசாக அரைத்து பின் ஒன்றாக சேர்க்கவும்.
இரண்டையும் அரைத்த பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின் ஒரு மூடி போட்டு மூடி வைத்து 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
நேற்று இரவு மாவு அரைத்து வைத்தோம் மறுநாள் காலையில் பார்த்தால் நன்றாக மாவு புளித்து இருக்கும்.
தோசை கல் சூடானதும் மெல்லியதாகவோ அல்லது கனமாகவே உங்களுக்கு பிடித்த மாதிரி தோசை சுட்டு எடுக்கவும்.
இதனுடன் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
Watch the recipe in video :
https://www.youtube.com/watch?v=YYYJOoGM_3s&t=188s
0 கருத்துகள்