சர்க்கரை பொங்கல் என்றாலே எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் சிறுதானியத்தில் இனிப்பு பொங்கல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
நாம் இன்று வரகு அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்யபோகின்றோம் இது உடலுக்கு மிகவும் வலிமை தரகூடியது. பச்சைஅரிசியில் செய்யும் பொங்கலைவிட வரகு அரிசியில் பொங்கல் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைய இந்த அரிசி மிகவும் உதவியாக உள்ளது.
Watch video : https://www.youtube.com/watch?v=I5buTJaQRL0
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
வெல்லம் - 3/4 கப்
முந்திரி பருப்பு - 10 to15 nos
திராட்சை - 1 tbsp
நெய் - 3 to 4 tbsp
உப்பு - 1/4 tsp
செய்முறை :
முதலில் பாசிபருப்பை வெறும் கடாயில் மிகவும் குறைவான தீயில் வைத்து சிறிது பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
5 நிமிடத்திற்கு பின் பாசிபருப்பை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
பாசிபருப்பு சிறிது ஆறியவுடன் இதனுடன் வரகு அரிசி சேர்த்து 2 அல்லது 3 முறை நன்றாக தண்ணீர்விட்டு அலசிக் கொள்ளவும்.
இதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 30நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வெல்லத்தை பொடியாக நசுக்கி பின் 3/4 கப் அளந்து எடுத்துக் கொள்ளவும், அதனுடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
வெல்லம் முழுவதும் கரைந்த பின் வடிகட்டவும் ஏனென்றால் சில நேரங்களில் வெல்லத்தில் தூசி மற்றும் மண் இருக்கும் அதனால் வடிகட்டி கொள்வது நல்லது.( நீங்கள் எடுத்துள்ள வெல்லம் ஏற்கனவே உபயோக படுத்திபார்த்து அதில் தூசி , மண் இல்லையென்றால் வெல்லத்தை வடிகட்டாமல் அப்படியேவும் சேர்க்கலாம்).
இதனுடன் 1 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்(அரிசி அளந்த அதே கப்பால் அளந்து கொள்ளவும்)ஏற்கனவே ஊறவைக்கும் போது 1 கப் சேர்த்து ஊறவைத்துள்ளோம் அந்த தண்ணீரையும் சேர்த்து மொத்தம் 2 1/4 கப் தண்ணீர் சேர்த்துள்ளோம்.
இப்பொழுது 1/4 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். உப்பு சேர்ப்பதால் சர்க்கரை பொங்கல் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
குக்கரை மூடி விசில் போட்டு வேகவைக்கவும். அடுப்பை மிதமான முதல் அதிகமான தியில் வைக்கவும்.
4 விசில் வந்த பின் அடுப்பை அணைத்துவிடவும் பின் குக்கரில் பிரஸ்சர் இறங்கிய பின் திறந்து பார்க்கவும், அரிசியும் பருப்பும் நன்றாக வெந்திருக்கும்.
சூடாக இருக்கும் போதே கரண்டியால் நன்றாக மசித்துவிடவும்.
மசித்த பின் வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
1 அல்லது 2 மேஜைகரண்டி நெய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பொங்கலை இன்னும் சுவை கூட்ட 1/4 கப் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்க்கவும்.(பால் தேவைபட்டால் சேர்க்கலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம்) பால் சேர்த்தால் சுவையாக இருக்கும் பசும் பாலுக்கு பதில் தேங்காய்பாலும் சேர்க்கலாம் அது உங்கள் விருப்பம்.
முந்திரி திராட்சை பொன்னிறமாக வறுப்பட்டபின் இதனை பொங்கலில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
😋😋😋😋😋சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி!!!!!!
0 கருத்துகள்