கீரை கூட்டு /சிறுகீரை கூட்டு/sirukeerai kottu/keerai kottu

 


சீறுகீரை பருப்பு கூட்டு மிகவும் சுவையாகவும், சுலபமாகவும் செய்யலாம்.  இந்தமாதிரி கீரை கூட்டு செய்தால் கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.



தேவையான பொருட்கள் :  


சிறு கீரை - 1 கட்டு
பாசிபருப்பு - 1/2  கப்
சின்னவெங்காயம் - 20 
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 1 அல்லது 2 (முழு பூண்டு)
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 மேஜைகரண்டி(tbsp)
உப்பு -  1 மேஜைகரண்டி(tbsp)
நல்லெண்யை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்


செய்முறை :


முதலில் கீரையை சுத்தம் செய்யவும். கீரையின் வேர்பகுதியை நீக்கிவிட்டு தண்டு பிஞ்சாக இருந்தால் அதனையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் தண்டை தனியாக எடுத்து வைத்து குழம்பு செய்யும் போது போட்டு வைக்கலாம்.






இப்பொழுது கீரையை நன்றாக தண்ணீர்விட்டு அலசி கொள்ளவும்.



தண்ணீர் நன்றாக வடிகட்டிய பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (கீரையை நறுக்கி விட்டு அலச கூடாது )





பாசிபருப்பை நன்றாக அலசி அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். (பாசிபருப்பை வறுத்தும் வேகவைக்கலாம்)




பாசிபருப்பு வேகவைக்கும் போது நல்லெண்ணை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் பருப்பு சீக்கரமாக வெந்துவிடும்.



வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாயை இரண்டாக கீறிவைத்துக் கொள்ளவும். பூண்டு மேல்தோல் உறித்த வைத்துக்கொள்ளவும்.(பூண்டு பிடிக்காதவர்கள் அதனை சேர்க்காமலும் செய்யலாம்.)


10 நிமிடத்திற்கு பின் பருப்பு நன்றாக மலர்ந்து வெந்திருக்கும், இப்பொழுது வெங்காயம், தக்காளி, பச்சைமிளாய் மற்றும் பூண்டு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.




இதனுடம் மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.





ஒரு 5 நிமிடத்திற்கு பின் நறுக்கிவைத்துள்ள கீரையை சேர்த்து மீண்டு கீரை வேகும்வரை வேகவைக்கவும்.




இதனுடன் உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கீரையை வேகவைக்கவும்.




5 லிருந்து 10 நிமிடத்திற்கு பின் கீரை நன்றாக வெந்திருக்கும். 




பருப்பு கீரை கூட்டு தயார்!!! ஆகிவிட்டது பின் இதனை தாளித்துக் கொள்ளலாம். ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும்.



எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்த பின் இந்த தாளிப்பை கீரை கூட்டு உடன் சேர்க்கவும்.






மிகவும் சுவையான😋😋😋😋😋, ஆரோக்கியமான கீரை பருப்பு கூட்டு ரெடி!!!! 





கருத்துரையிடுக

0 கருத்துகள்