முருங்கை கீரையில் தோசை இட்லியா!!!
முருங்கை கீரை குழம்பு, பொரியல், கூட்டு மற்றும் சூப்பு போன்றுதான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் இதை போன்று இட்லியாகவோ!!! தோசையாகவோ சாப்பிட்டு இருக்க மாட்டிர்கள். மிகவும் சுவையானதாகவும் உடலிற்கு ஆரோக்கியான தோசை இட்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்!!!!
தேவையான பொருட்கள் :
முருங்கை கீரை - 2 கைபிடி
துவரம் பருப்பு - 1/4 கப்
இட்லி அரிசி - 1 கப்
பச்சை அரிசி - 1/2 கப்
உளுந்து - 3/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசி, உளுந்து மற்றும் பருப்பு சேர்த்து 2 அல்லது 3 முறை நன்றாக தண்ணீர் விட்டு அலசி எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக அலசி எடுத்த பின்பு 3 கப் தண்ணீர் சேர்த்து, 5 லிருந்து 6 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
2 கைபிடியளவு முருங்கைகீரை எடுத்து அதனை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
அலசிய பின் 5 நிமிடம் காய்கறி வடிகட்டியில் அப்படியே வைத்தால் தண்ணீர் நன்றாக வடிந்துவிடும்.
பின்பு ஒரு மிக்ஸியில் முருங்கை கீரை, இஞ்சி, மிளகு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
இதைபோல் நன்றாக நைசாக அரைத்து எடுக்கவும்.
இரண்டு பாகங்களாக பிரித்து அரைத்தால் மாவு சீக்கீரம் அரைப்படும்.
1/4 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியை அலசி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
பின்பு மாவை கைகளால் நன்றாக கலந்து வைக்கவும். கைகளினால் கலந்து வைத்தால் தான் மாவு சீக்கீரம் புளித்து வரும் மற்றும் இட்லி நன்றாக சுவையாகவும் இருக்கும்.
இதனை 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் வைத்தால் நன்றாக மாவு புளித்துவரும்.
மறுநாள் காலை மாவு நன்றாக புளித்து இருக்கும். பின் அதனை நன்றாக மாவை கலந்து கொள்ளவும்.
இப்பொழுது இட்லி தட்டில் எண்ணெய் அல்லது துணி போட்டு மாவை ஊற்றி வேகவைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைக்கவும்.
10 நிமிடத்திற்கு பின் இட்லி நன்றாக வெந்திருக்கும். ஒரு குச்சியை வைத்து குத்தி பார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி நன்றாக வெந்திருக்கு என்று அர்த்தம் இல்லையென்றால் மீண்டும் வைத்து வேகவைக்கவும்.
இதே மாவில் தோசையும் சூட்டுக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
இரும்பு சத்து நிறைத்த சுவையான இட்லி ரெடி!!!!
0 கருத்துகள்