சத்து மாவு வீட்டிலேயே மிகவும் சத்தான தரமான பொருட்களை சேர்த்து செய்யலாம்!!! கடையில் வாங்குவதைவிட வீட்டிலேயே செய்தால் விலையும் குறைவு நல்ல பொருட்களை சேர்ப்பதால் நமக்கும் மனநிறைவாக இருக்கும்.
Watch video : https://www.youtube.com/watch?v=Uf_lKhLhMZI
தேவையான பொருட்கள் :
சிகப்பு அரிசி - 250கி(1 1/4 கப்)
கருப்பு உளுந்து - 250 கி ( 1 + 3 tbsp)
வெள்ளை சோளம் - 250கி (1/4 கப் )
ஜவ்வரிசி - 250கி(1 1/2 கப்)
வேர்கடலை - 250கி(1 1/2 கப்)
பொட்டுகடலை - 250கி(1 1/2 கப்)
சம்பா கோதுமை - 250கி(1 1/4 கப்)
கேழ்வரகு - 250கி(1 1/4 கப்)
கம்பு - 250கி(1 1/4 கப்)
தினை - 250கி(1 1/4 கப்)
முந்திரி பருப்பு - 150 கிராம்
பாதாம் - 100 கிராம்
மக்காசோளம் - 250கி(1 + 2 tbsp)
பார்லி - 250கி(1 1/4 கப்)
பச்சை பயிறு - 250கி(1 + 2 tbsp)
காராமணி - 250கி(1 + 2 tbsp)
ஏலக்காய் - 25 கிராம்
s செய்முறை :
எல்லா பொருட்களையும் தனிதனியாக மிகவும் குறைவான தீயில் வைத்து வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
எல்லா பொருட்களையும் வறுத்த பின் ஆறவைத்து பின் மாவு மில்லில் கொடுத்து பொடியாக அரைத்து வாங்கி கொள்ளவும்.
நாம் எடுத்துள்ள அளவிற்கு 4 kg சத்து மாவு கிடைக்கும்.
மிக்ஸியில அரைக்க வேண்டுமென்றால் குறைவான அளவு எடுத்து கொள்ளவும் மிக்ஸியில் அரைத்த பின் சல்லடையால் சலித்துக் கொள்ளவும்.
மாவு அரைத்த பின் ஒரு செய்திதாள் அல்லது அகலமான தட்டில் கொட்டி ஆறவைக்கவும் நன்றாக ஆறிய பின் காற்று போகாத டப்பாவில் கொட்டி வைக்கவும்.
இது 6 மாதங்கள் வரை கெட்டுபோகாது சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
0 கருத்துகள்