பீட்ரூட் என்றாலே எல்லாருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் இரத்தஅனுக்களை அதிகரிக்கும் என்று ஆனால் சிலருக்கு பீட்ரூட்டை பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்தால் விரும்பி சாப்பிடமாட்டார்கள், முக்கியமாக குழந்தைகள்.
ஹல்வாவாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் விரும்பி சாப்பிடுவார்கள்.
கண்டிப்பாக நாம் செய்யும் முறையில் செய்யுங்கள் ஏனென்றால் நாம் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் முற்றிலும் நாட்டுச்சர்க்கரையில் செய்வதால் மிகவும் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
Please click here & watch the video : https://www.youtube.com/watch?v=aE1v187KVTc
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 1/2 கிலோ(500g)
நாட்டுசர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 2 மேஜைகரண்டி(tbsp)
பால் - 500ml
ஏலக்காய் - 4
முந்திரிபருப்பு - 20
உலர் திராட்சை - 2 மேஜைகரண்டி (tbsp)
செய்முறை :
முதலில் பீட்ரூட்டின் மேல் தோலை செதுக்கிக் கொள்ளவும்
தோலையை நீக்கிய பின் நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். பின் கீழே கொடுக்கப்பட்டது போல் உள்ளதில் அல்லது உங்கள் வீட்டில் எந்த கேரட் செதுக்கி உள்ளதோ அதில் சிறிய துளையுள்ளதில் துருவிக் கொள்ளவும்.
இதைபோல் எல்லா பீட்ரூட்டையும் துருவி எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
சர்க்கரை முற்றிலும் கரைந்தால் மட்டும் போதும் பாகு பதம் வைக்க தேவையில்லை.
இப்பொழுது ஒரு வடிகட்டியால் சர்க்கரை கரைசலை வடிக்கட்டிக் கொள்ளவும். (கண்டிப்பாக வடிகட்டவும் அப்பொழுதுதான் சர்க்ரையிலுள்ள துசி மற்றும் அழுக்குகளை நீக்க முடியும்).
பின்பு ஒரு அடிகனமான கடாயில் 2 மேஜைகரண்டி (2 tbsp)நெய் சேர்க்கவும்.
முதலில் 20 முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிரமாக வரும்வரை வறுக்கவும்.
முந்திரி பருப்பு வறுப்பட்ட பின்பு அதில் உலர் திராட்சையை சேர்த்து உடனே மற்றொரு பாத்திரத்தில் வறுத்த முந்திரியையும், திராட்சையையும் எடுத்து வைக்கவும்.
பின்பு அதே கடாயில் துருவிவைத்துள்ள பீட்ரூட் துருவலைச் சேர்த்து பீட்ரூட்டில்லுள்ள ஈரபதம் போக வதக்கி கொள்ளவும். மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
10 நிமிடத்திற்கு பின் பீட்ரூட்டில்லுள்ள ஈரபதம் முற்றிலும் போன பின்பு அதில் பாலை சேர்த்து நன்றாக பீட்ரூட் வெந்து மசியும் வரை வேகவைக்கவும்.
பால் சேர்த்து 10 நிமிடத்திற்கு பின் நாட்டுசர்க்கரை கரைசலை சேர்க்கவும்.(சர்க்கரை கரைசல் சூடாக இருக்க கூடாது). மிதமான தீயில் வைத்து கடாயில் ஒட்டாமல் தெரண்டு வரும்வரை வதக்கவும்.
இப்பொழுது சர்க்கரை கரைசல் மற்றும் பால் சேர்த்து 15 நிமிடத்திற்கு பின் ஒரளவு வற்றியிருக்கு இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்க்கவும்.
ஹல்வா இறக்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன் முந்திரியை சேர்க்கவும் அப்பொழுதுதான் முந்திரி பருப்பு ஹல்வாவுடன் நன்றாக சேர்ந்து சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
10 நிமிடத்திற்கு பின் ஹல்வா கடாயில் ஒட்டாமல் நன்றாக திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
0 கருத்துகள்