ஒருமுறை இதுபோன்று மரவள்ளிகிழங்கு வறுவல் செய்தால் கண்டிப்பாக அடிக்கடி செய்வீர்கள் !!!!!!!!!அவ்வளவு சுவையாக இருக்கும்.
மரவள்ளிகிழங்கை வித்தியாசமாக இதுபோன்று வறுவல் செய்தால் மிகவும் சுவையாவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மரவள்ளி கிழங்கு - 400 கிராம்
தனி மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள்(தனியா தூள் ) - 1 டேபுள் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக் கேற்ப
கடுகு - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டேபுள் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் மரவள்ளிகிழங்கு தோலை உரிக்க முடிந்தால் உரித்துக் கொள்ளவும் அல்லது கேரட் செதுக்கியால் மேல் தோலை நீக்கி கொள்ளவும்.
தோலை நீக்கிய பின் நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். பின் இரண்டாக நறுக்கிய பின் மீண்டும் அதனை இரண்டாக வெட்டவும் பின் சிறுசிறு சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குறிப்பு : மரவள்ளிகிழங்கு வாங்கும் போது வேர்இல்லாம்ல் பாா்த்து வாங்கி கொள்ளவும்.
பின் அதனை ஒரு காய்கறி வடிகட்டியில் எடுத்துக் கொள்ளவும்.
1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து வரும் போது மரவள்ளிகிழங்கு உள்ள வடிகட்டியை வைக்கவும்.
குக்கரில் வேகவைப்பதை விட இது போன்று ஆவியில் வேகவைக்கும் போது சுவையாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
ஒரு மூடி போட்டு மூடிவைத்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
10 நிமிடத்திற்கு பின் ஒரு குச்சியால் குத்தி பார்த்தால் சுலபமாக இறங்கினால் மரவள்ளிகிழங்கு நன்றாக வெந்துள்ளது என்று அர்த்தம். இல்லையென்றால் மீண்டும் ஒரு 5 அல்லது 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். கிழங்கின் தன்னையை பொருத்து வேகவைக்க கூடிய நேரமும் மாறுபடும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு சேர்க்கவும்.
கடுகு முற்றிலும் பொரிந்த பின் வேகவைத்து வைத்துள்ள மரவள்ளிகிழங்கை சேர்க்கவும்.
மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.




மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.


தற்பொழுது உப்பு சரிபாா்த்துக் கொள்ளவும். உப்பு சிறிது குறைவாக உள்ளதால் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்கின்றேன், உங்கள் சுவைக்கு ஏற்றார் போல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
தீயை மிகவும் குறைவாக வைத்து மசாலாவின் பச்சைவாசனை போக வறுத்துக் கொள்ளவும். 6 அல்லது 7 நிமிடத்திற்கு பின் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து மேலும் 1 நிமிடம் வறுத்து பின் இறக்கவும்.
மிகவும் சுவையான மரவள்ளி கிழங்கு வறுவல் ரெடி!!!!!!
இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், கலந்த சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டிற்கு தொட்டுக்க மட்டுமில்லாம் இதனை அப்படியே ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடாலம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்