தினமும் ஒரே மாதிரி தோசை, இட்லி சாப்பிட்டு அலுத்து போய்விட்டதா!!!!!
இன்று ஒரு புதிய சுவையான, கலர்புல்லானா தோசை செய்யலாம் வாருங்கள் !!!!
Please click here & watch video :https://www.youtube.com/watch?v=Ulda-P_muEg
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/4 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசி பருப்பை சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசிக் கொள்ளவும்.
அலசிய பின் 1 1/2 கப் தண்ணீர் சேரத்து 4 லிருந்து 5 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
4 மணிநேரத்திற்கு பின் தக்காளியை முதலில் மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.
பின் அதனுடன் சிறிதளவு இஞ்சித்துண்டு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
இதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை பாதி சேர்த்து சிறிது கரகரப்பாக அரைக்கவும். (மிகவும் நைசாக இல்லாமலும் மிகவும் கரகரப்பாக இல்லாமலும் மிதாக அரைத்துக் கொள்ளவும்.)
மீதமுள்ள அரிசியை அரைக்கும் போது அதனுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்பு கைகளினால் மாவை ஒரு 5 நிமிடங்கள் கலந்து வைக்கவும்.
இந்த மாவை 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்வைக்கவும்.
6 மணிநேரத்திற்கு பின் மாவை நன்றாக கலந்துக் கொள்ளவும். பின் தோசைகளாக வார்த்துக் கொள்ளவும்.
தோசையின் ஓரங்களில் நல்லெண்ணை சிறிதளவு ஊற்றிக் கொள்ளவும்.
2 நிமிடத்திற்கு பின் தோசையின் ஓரங்களில் சிவந்து வரும்போது தோசையை திருப்பி போடவும்.
மீண்டும் 2 நிமிடத்திற்கு பின் தோசையை எடுத்து சுவையான தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சுட சுட பரிமாறலாம்.
0 கருத்துகள்