Please click here & watch the video: https://www.youtube.com/watch?v=OdsiC_89LqY
தேவையான பொருட்கள் :
1. பச்சை பயறு - 2 கப்
2. பழுப்பு சர்க்கரை - 1 1/2 கப்
3. ஏலக்காய் - 8 nos
4. நெய் - தேவைக் கேற்ப
செய்முறை :
- முதலில் பச்சை பயரை எண்ணெய் நெய் ’சேர்க்காமல் வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
3. பச்சை பயறு நன்றாக வறுப்பட்டதும் மற்றொரு அகலமான தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
4. பச்சை பயறு நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் ஏலக்காயும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
5. பொடியாக அரைத்த பின் அதனை மிகவும் சிறிய ஓட்டை உள்ள சல்லடையில் சலித்து எடுக்கவும்.
6. சலித்த பின் மீதமுள்ள திப்பையை மீண்டும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுக்கவும்
7. அரைத்த மாவை மீண்டும சல்லடையில் சலித்துக் கொள்ளவும் மீண்டும் மீதமுள்ள திப்பையை அரைத்து இதேபோல் சலித்து எல்லா மாவையும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
8. இப்பொழுது சர்க்கரையை பொடியாக அரைத்து எடுக்கவும்.

9. பொடியாக அரைத்த பின் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
10. ஒரு மேஜைகரண்டி நெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள முந்திரியை வறுத்து எடுக்கவும்.
11. முந்திரி பொன்னிறமாக வறுப்பட்ட பின் அதனை மாவுடன் கலந்துக் கொள்ளவும்.
12. கலந்து வைத்துள்ள மாவியிலிருந்து 1 கப் மாவை மட்டு ம் மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
13. இப்பொழுது ஒரு கடாயில் 1 மேஜைகரண்டி நெய் சேர்த்து நன்றாக சூடுபடுத்தவும்.
14. நெய்யிலிருந்து இதுபோல் புகைவரும் போது அதனை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
15. நெய் நன்றாக சூடாக இருக்கும் போதே மாவில் சேர்க்கவும்.
16. சூடு ஆறுவதற்கு முன் ஒரு கரண்டியால் கலந்து விடவும்.
17. கைபொறுக்கும் சூடுவந்தவுடன் இதனை உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மிகவும் வேகமாக செய்ய வேண்டும் இல்லையென்றால் மாவு உருண்டை பிடிக்க வராது.
குறிப்பு : உருண்டை பிடிக்க வரவில்லை என்றால் மீண்டும் சிறிது நெய் சேர்த்து சூடு செய்து மாவில் சேர்த்தால் சுலபமாக லட்டு செய்யலாம்.
மீதமுள்ள மாவை ஒரு காற்று போகத பாத்திரத்தில் போட்டு வைத்தால் 1 -2 மாதம் வரை வீணபோகாமல் இருக்கும்.
நமக்கு எப்பொழுது லட்டு தேவையே அப்பொழுது நெய்யினை சூடு செய்து லட்டு செய்து கொள்ளலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்