தேங்காய் சட்னி ஹோட்டலில் வைப்பது போன்ற சுவையில் எப்படி வீட்டில் வைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Youtube channel link : https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - 1/2 cup
பொட்டுகடலை - 1 மேஜைகரண்டி
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1 (அ) 2
முந்திரி - 8
உப்பு - 1/4 தேக்கரண்டி
தாளிக்க :
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி(tsp)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
தேங்காய் துருவல், பொட்டுகடலை, இஞ்சி, பச்சைமிளகாய் , முந்திரி மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த பின் மற்றொரு பத்திரத்தில் மாற்றி வைக்கவும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியை அலசி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
கடுகு பொரிந்த பின் கருவேப்பிலை சேர்த்து சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
உப்பு சரிபார்க்கவும் தேவையெனில் உங்கள் சுவைகேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
மிகவும் சுவையான தேங்காய் சட்னி ரொடி!!!!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்