வரகு அரிசி ஆப்பம் /சிறுதானிய ஆப்பம் / kodo millet appam/millet recipes



Please click here & watch the videohttps://www.youtube.com/watch?v=saiJAEU4tUo


தேவையான பொருட்கள் :

வரகு அரிசி  -  1 கப்
பச்சைஅரிசி  -  1/2 கப்
உளுந்து - 1/4 கப்
சாதம்  -  1 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உப்பு  -  2 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வரகு, பச்சை அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.
























இதனை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும்.
























நன்றாக அலசிய பின் 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். 























இதனை 6 மணிநேரம் ஊறவைக்கவும்.  

















 6 மணிநேரத்திற்கு பின் நன்றாக ஊறி இருக்கும் இப்பொழுது  அரைத்துக் கொள்ளலாம்.







ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.























முதலில் கரகரப்பாக அரைக்கவும்.
























கரகரப்பாக அரைத்த பின் அதனுடன் வேகவைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் சிறிது கரகரப்பாக அரைக்கவும்.



























மிகவும் கரகரப்பாகவும் இல்லாமல் மிகவும் பொடியாகவும் இல்லாமல் அரைத்து எடுக்கவும்.
























மாவை தொட்டு பார்த்தால் அதில் சிறிது மணல் போன்று இருக்கும் இந்த பதத்தில் அரைத்து எடுக்கவும்.























ஒரு அகலமான பாத்திரத்தில்  மாற்றி வைக்கவும் பின்பு மிக்ஸியை  1/4 கப் தண்ணீர் விட்டு அலசி அதனையும் சேர்த்துக் கொள்ளவும்.
























மாவை கைகலால் நன்றாக கலந்து வைக்கவும் அப்பொழுதுதான் மாவு நன்றாக புளித்து வரும்.  கரண்டியால் கலந்து வைத்தால் சீக்கிரம் புளித்து வராது.
























இதனை 12 முதல் 14 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.  அப்பொழுதுதான் ஆப்பம் நன்றாக சுவையாக இருக்கும்.























மறுநாள் நன்றாக மாவு  புளித்த பின் மாவை நன்றாக கலந்த பின் ஆப்ப சட்டியில் ஆப்பங்கள் வார்த்து எடுக்கவும்.























ஆப்ப கடாய் சூடான பின் ஒரு கரண்டி மாவை ஊற்றி  ஆப்ப கடாயயை சுற்றி ஆப்பவடியில் சுற்றி வைக்கவும்.
























பின்பு மூடி போட்டு குறைவான தீயில் வேகவைக்கவும்.























2 நிமிடத்திற்கு பின் ஆப்பம் நன்றாக வெந்திருக்கும்.























இப்பொழுது ஓரங்களை கரண்டியால் எடுத்து விட்டு பின் எடுத்தால் சுலபமாக எடுத்து பரிமாறலாம்.
























இதனுடன் பாயா, வெஜ் குருமா, தேங்காய் பால் மற்றும் சட்னியுடன் சாப்பிடுதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக  இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது  Facebook page   ஐ like  செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.

Youtube channel link https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A



கருத்துரையிடுக

0 கருத்துகள்