பிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஆனால் கடையில் உள்ளது போன்று வீட்டில் செய்ய முடியவில்லை என்று இனி கவலை வேண்டாம். கீழே கொடுத்துள்ள முறைபடி செய்தால் சுவையான ஹோட்டலில் உள்ள பிரியாணியை விட மிகவும் சுவையான பிரியாணி செய்யலாம்.
Please click here & watch the video: https://www.youtube.com/watch?v=059DYKT-feI
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 300 கிராம்
பாசுமதி அரிசி - 1 கப்(250கி)
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபுள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபுள் ஸ்பூன்
தயிர் - 1 டேபுள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பொதினா - சிறிதளவு
உப்பு -
தனிமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிரயாணி மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 6
பட்டை - சிறிதளவு
பட்டை இலை - 2
அன்னாசி முக்கு -
பிரிஞ்சு பூ - சிறதளவு
செய்முறை :
1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய்யை கீறிவைத்துக் கொள்ளவும்.
2. சிக்கனை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி எடுத்து வைக்கவும்.
3. பொதினா கொத்தமல்லி அலசி எடுத்துக் கொள்ளவும்.
4. ஒரு அகலமான கடாயில் வெண்ணையை சேர்க்கவும்.
5. வெண்ணையை சிறிது உருகியவுடன் வெங்காயத்தை சேர்க்கவும்.
6. வெங்காயம் சிறிது வதங்கியதும் பட்டை இலை, கல்பாசி, பட்டை, கிராம்பு மற்றும் அன்னாசிமுக்கு அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும்.
7. வெங்காயம் நன்றாக வதக்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும் அதனும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
8. பொதினா, சிக்கன், மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், பச்சைமிளகாய், தயிறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.




9. இது வதங்கும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் நட்சத்திர சோம்பு 1 , ஏலக்காய் 2 , கிராம்பு 2 மற்றும் பிரஞ்சு இலை சேர்த்து கொதிக்க விடவும்.
10. சிக்கன் வெந்த பின் அடுப்பை மிகவும் குறைவான தீயில் வைக்கவும்.
11. இப்பொழுது தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும் அதனுடன் சிறிது பொதினா மற்றும் 1 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
12. அரிசி முக்கால் (3/4) பாகம் வேகும் வரை வேகவைக்கவும்.
13. இப்பொழுது அரிசியை வடிகட்டியால் எடுத்து ஏற்கனவே செய்து வைத்துள்ள சிக்கன் மசாலாவில் சேர்க்கவும். சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சாதத்தை மட்டும் சேர்க்கவும்.
14. சாதத்தை சமமாக வைத்து அதில் கொத்தமல்லி மற்றும் பொதின தூவி மூடி போட்டு மிகவும் குறைவான தீயில 10 நிமிடங்கள் தம் போடவும்.
16. 10 நிமிடத்திற்கு பின் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்