பச்சைபயறு பணியாரம்|பாசி பருப்பு பணியாரம் |moong dal paniyaram|green gram paniyaram|green moongdal paniyaram

பச்சைபயிறு பணியாரம்  இதனை குழந்தைகளுக்கு லஞ்சு பாக்ஸ் அல்லது ஸ்னாக்ஸ் பாக்ஸில் வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் இதில் அதிகஅளவில் நிறைந்துள்ளது.

Please click here&watch in video : https://www.youtube.com/watch?v=FNfe3xFeAuk














தேவையான பொருட்கள் :


இரண்டாக உடைத்த பச்சைபயறு  - 1 கப்
வெல்லம் - 1/2 கப் (அ) 3/4 கப்
ஏலக்காய் - 5
அரிசி மாவு - 2 மேஜைகரண்டி

உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :


முதலில் பச்சை பயரை நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
























4 மணி நேரத்திற்கு பிறகு பச்சை பயறு நன்றாக ஊறி இருக்கும் பயரின் தோல் சுலபமாக பிரிந்து வரும். 
























இப்பொழுது மேல் தோல் முழுவதும் போகும் வரை நன்றாக அலசி எடுக்கவும்.

























இதுபோன்று எல்லா தோலையையும் நீக்கி வைக்கவும்.























பின்பு அதனை ஒரு வடிகட்டியில் போட்டு 15 நிமிடங்கள் தண்ணீர் முழுவதும் வடியும் வரை அப்படியே வைக்கவும். 



























15 நிமிடத்திற்கு பின் மிக்ஸியில் தண்ணீர் சேரக்காமல் போடவும்.
























இதனுடன் ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.














































கரகரப்பாக அரைத்த பின் இதனுடன் பொடித்த வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து ஒரு இரண்டு சுத்து சுத்தி எடுக்கவும்.


























மிகவும் பொடியாக அரைக்க கூடாது சிறிது கரகரப்பாக கரைத்துக் கொள்ளவும்.
























அரைத்து எடுத்த பின் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்..





பின்பு 1/4 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியை நன்றாக அலசி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.

























நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.























இதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
























எண்ணெய் சூடானதும் சிறிய கரண்டியால் மாவையை எடுத்து சிறிது சிறிதாக பணியாரம்  ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் மிகவும் சூடாக இருக்க கூடாது மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.



























எண்ணெய்யில் மாவு ஊற்றிய பின் அடுப்பை மிகவும் குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும். அப்பொழுது தான் பண்யாரம் உள்ளேயும் நன்றாக வெந்திருக்கும்.  2 நிமிடத்திற்கு பின் பணியாரத்தை திருப்பி போடவும்.




பணியாரத்தை திருப்பிய பின் மீண்டும் மிகவும் குறைவான தீயில் 7 நிமிடம் வேகவைக்கவும்.
























6 to 7 நிமிடத்திற்கு பின் பணியாரம் பொன்னிறமாக வெந்தபின். இப்பொழுது பணியாரத்தை எண்ணெய்யிலிருந்து எண்ணெய்யை நன்றாக வடிகட்டி எடுக்கவும்.























இதே போன்று மீதாமுள்ள பணியாரத்தை சூட்டு எடுக்கவும்.  மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சைபயிறு பணியாரம் ரெடி!!!!























இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக  இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது  Facebook page   ஐ like  செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.



Youtube channel link UCRuCNqq2GP9o4ARSKGvct6A





கருத்துரையிடுக

0 கருத்துகள்