தினமும் ஒரே மாதிரி சப்பாத்தி செய்யாமல் வித்தியாசமான சுவையான சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து சப்பாத்தி செய்யலாம் வாங்க !!!
சர்க்கரை வள்ளி கிழங்கு மற்ற கிழங்கு வகைகள் போன்று இல்லாமல் அதிக அளவில் நார் சத்து மற்றும் விட்டமின்கள் மினர்சல்கள் உள்ளது. இதில் பீடா கரோட்டீன் உள்ளதால் கண்களுக்கும் மிகவும் நல்லது
.
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரைவள்ளி கிழங்கு - 500 கிராம்
உப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 1 மேஜைகரண்டி
பின் இரண்டு முனைகளை வெட்டி நான்கு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரே அளவாக வெட்டிக் கொள்ளவும் அப்பொழுதுதான் எல்லா கிழங்கும் ஒரே மாதிரி வேகும்.
20 நிமிடத்திற்கு பின் பார்த்தால் கிழங்கு நன்றாக வெந்திருக்கும். இது போன்று குச்சி அல்லது கம்பி வைத்து குத்தினால் சுலபமாக இறங்கினால் கிழங்கு நன்றாக வெந்திருக்கும். இல்லையென்றால் மேலும் 5 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு மற்ற கிழங்கு வகைகள் போன்று இல்லாமல் அதிக அளவில் நார் சத்து மற்றும் விட்டமின்கள் மினர்சல்கள் உள்ளது. இதில் பீடா கரோட்டீன் உள்ளதால் கண்களுக்கும் மிகவும் நல்லது
.
Please click here&watch in video : https://www.youtube.com/watch?v=bYe5i-cD4HE&feature=youtu.be
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரைவள்ளி கிழங்கு - 500 கிராம்
உப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 1 மேஜைகரண்டி
செய்முறை :
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக தூசி மண் போக அலசி எடுத்துக் கொள்ளவும்.
இது மாதிரி எவர்சில்வர் வடிகட்டியில் கிழங்கை போட்டு அதில் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
கிழங்கை ஆவியில் வேகவைக்கவும் இட்லி பானை அல்லது ஸ்டீமர் இருந்தால் அதனை பயன்படுத்தி வேகவைக்கவும்.
மூடி போட்டு வேகவைக்கவும்.
20 நிமிடத்திற்கு பின் பார்த்தால் கிழங்கு நன்றாக வெந்திருக்கும். இது போன்று குச்சி அல்லது கம்பி வைத்து குத்தினால் சுலபமாக இறங்கினால் கிழங்கு நன்றாக வெந்திருக்கும். இல்லையென்றால் மேலும் 5 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறிய பின் தோலை உரித்து வைக்கவும்.
தோலை உரித்த பின் நன்றாக மசித்துக் கொள்ளவும். சர்க்கரை வள்ளி கிழங்கை கட்டியில்லாமல் மசிக்கவும் அப்பொழுதுதான் சப்பாத்தி மாவு நன்றாக திரட்ட வரும்.
மத்து வைத்து மசித்து பின் கைகளாலும் நன்றாக மசித்துவிடவும்.
மசித்த கிழங்குடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து முதலில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
மாவும் கிழங்கும் கலந்த பின் தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
நெய் சேர்த்து மாவை ஸ்மூத்தாக பிசைந்துக் கொள்ளவும். அதிகம் அழுத்தம் கொடுக்காமல் ஸ்மூத்தாக மாவு பிசைந்தால் தான் சப்பாத்தியும் நல்ல மிருதுவாக வரும்.
கைகளால் தொட்டு பார்த்தால் இதுபோன்று மாவு மிருதுவாக இருக்க வேண்டும்.
இதனை அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும். குறைந்தது அரை மணி நேரம்மாவது ஊறினால் தான் சப்பாத்தி நன்றாக மிருதுவாக வரும்.
1 மணி நேரத்திற்கு பின் உங்களுக்கு தேவையான அளவுகளில் சப்பாத்திகளாக திரட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது தோசைக் கல்லில் சப்பாத்திகளை சுட்டு எடுக்கவும்.
சப்பாத்தியில் நெய் தடவி இரண்டு பக்கங்களும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
சுவையான சப்பாத்தி ரெடி !!! இதனுடன் இன்று நான் இறால் தொக்கு செய்துள்ளேன் மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு சைடுடிஸ்சாக வெஜிடபள் குருமா, காளான் குருமா பன்னீர் பட்டர் மாசாலா போன்று எதனுடன் வைத்து சாப்பிட்டாலும் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
0 கருத்துகள்