உருனை கிழங்கு பூரி மசாலா ஹோட்டலில் செய்வதை விட மிகவும் சுவையாக வீட்டிலேயே செய்யலாம். இப்பொழுது நாம் செய்ய போகின்ற முறையில் பூரி மசாலா செய்யதால் இரண்டு பூரி கூடுதலாக சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் ரெசிபி எப்படி செய்யலாம் என்ற பார்க்கலாம்.
Please click here & watch the video: https://www.youtube.com/watch?v=rMxFBpWH2Ik
15 நிமிடத்திற்கு பின் Toothpick வைத்து குத்திபார்த்தால் சுலபமாக இறங்கினால் உருளைகிழங்கு நன்றாக வெந்திருக்கும். இல்லையென்றால் மீண்டும் 5 நிமிடங்கள் வேவைத்துக் கொள்ளவும்.
உருளைகிழங்கு வெந்தவுடன் தண்ணீயிலிருந்து எடுத்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதுடன் கடுகு சேர்க்கவும்.
Please click here & watch the video: https://www.youtube.com/watch?v=rMxFBpWH2Ik
தேவையான பொருட்கள் :
உருளைகிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 12 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 மேஜைகரண்டி
எண்ணெய் - 2 மேஜைகரண்டி
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கடலைமாவு - 1 மேஜைகரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 3/4 டீஸ்பூன்(ருசிக்கேற்ப)
இடிக்க :
பூண்டு பல் - 15
இஞ்சி - சிறுதுண்டு
செய்முறை :
முதலில் உருளை கிழங்கை நன்றாக மண் தூசி போக அலசி எடுக்கவும். பின் உருளைகிழங்கை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டவும். உருளை கிழங்கு முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைக்கவும். (உருளைக் கிழங்கை குக்கரில் வேகவைத்தும் எடுத்துக் கொள்ளலாம். )
15 நிமிடத்திற்கு பின் Toothpick வைத்து குத்திபார்த்தால் சுலபமாக இறங்கினால் உருளைகிழங்கு நன்றாக வெந்திருக்கும். இல்லையென்றால் மீண்டும் 5 நிமிடங்கள் வேவைத்துக் கொள்ளவும்.
உருளைகிழங்கு வெந்தவுடன் தண்ணீயிலிருந்து எடுத்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
மீதமுள்ள தண்ணீரை வீணாக்காமல் இதனை நாம் மசாலா செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு ஆறிய பின் தோலை உரித்து கிழங்கை மசித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய்யை இரண்டாக கீறி வைக்கவும். கொத்தமல்லியை அலசி வைக்கவும்.
.(பூண்டு பிடிக்காதவர்கள் அதனை தவிர்த்து விட்டும் செய்யலாம் )
பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து இடித்துக் கொள்ளவும். இப்படி இடித்து சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும்.
கடுகு பொரிந்த பின் சீரகம் மற்றும் கடலைப்பருப்பு சேர்க்கவும்.
கடலைப்பருப்பு சிவக்க வறுப்பட்ட பின் வெங்காயம் , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய்யை சேர்த்து தக்காளி நன்றாக கரையும் வரை வதக்கவும். இதனுடன் இடிச்சு வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசணை போக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின் மஞ்சள்த்தூள் மற்றும் மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை சேரக்கவும்.
இதனுடன் உருளைகிழங்கு வேவைத்த தண்ணீர் ,கடலைமாவு மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் நன்றாக கொதிக்க விடவும்.
இந்த நேரத்தில் உப்பு சரிபார்க்கவும் 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
7 நிமிடத்திற்கு பின் கடலைமாவு பச்சை வாசணை போக நன்றாக வெந்திருக்கும்.
சுவையான அட்டகாசமான உருளைகிழங்கு பூரி மசாலா ரெடி!!!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்