வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத நேரத்தில் மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் செய்யலாம் இந்த குழம்பை. மண்சட்டியில் காரகுழம்பை வைத்தால் அதன் ருசியே வித்தியசமானதான நல்ல மணமாகவும் இருக்கும்.
Please click here watch the video :https://www.youtube.com/watch?v=CtuSUTKIKZM
Serves : 4
Preparation time : 10mins
Cooking time : 35 to 40 mins
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 250 கிராம்(30 nos)
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
கலந்த குழம்பு மிளகாய்த்தூள் - 3 மேஜைகரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 மேஜைகரண்டி
நல்லெண்ணெய் - 4 மேஜைகரண்டி
கடுகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் புளியை நன்றாக தண்ணீர்விட்டு அலசிய பின் சிறதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின் புளி நன்றாக ஊறி இருக்கும். பின்
அதனை நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் புளியை கரைத்து திக்கான புளி கரைசலாக எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஒரு மண்சட்டி அல்லது கடாயில் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும்.
கடுகு முழுவதும் பொரிந்தவுடன் சின்ன வெங்காயத்தை சேர்க்கவும் பின் 3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
3 நிமிடத்திற்கு பின் தக்காளி மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து வெங்காயமும் தக்காளியும் நன்றாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பின் கலந்து வைத்துள்ள குழம்பு கரைசலை சேர்க்கவும். இதனுடன் மீண்டும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான வெங்காய காரகுழம்பு ரெடி! இதற்கு சைடுடிஸ் அப்பளம் அல்லது அவரைக்காய் பொரியல் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்