Watch this recipe in video : https://www.youtube.com/watch?v=lVgjYsManVU&t=12s
அசோகா ஹல்வா தஞ்சாவூர், மன்னார்குடி ஊர் பக்கங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை. இங்கு நடைபெறும் திருமண சாப்பாட்டில் இந்த இனிப்பு கண்டிப்பாக இருக்கும். இது சாப்பிடுவதற்கு பாதாமில் செய்த ஹல்வா போன்றே இருக்கும். இங்குள்ள எல்லா ஸ்வீட் கடைகளிலும் அசோகா ஹல்வா கிடைக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான இந்த ஹல்வாவை நாம் வீட்டில் மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க!!!
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : UCRuCNqq2GP9o4ARSKGvct6A
தேவையான பொருட்கள் :
பாசி பருப்பு - 1/2 கப்
பழுப்பு சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி - 10
கோதுமை மாவு - 2 மேஜைகரண்டி.
கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் பாசிபருப்பை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக தண்ணீர்விட்டு அலசிக் கொள்ளவும்.
நன்றாக அலசிய பின் குக்கரில் போட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் (400 ml) சேர்க்கவும். இப்பொழுது குக்கரை மூடி விசிலையும் போடவும்.
இதனை மிகவும் குறையான தீயில் வைத்து வேகவைக்கவும்.
பின் ஐந்து விசில் வரும் வரை வைத்து இறக்கவும். குக்கரில் பிரஸ்சர் இறங்கிய பின் பார்க்கலாம்.
இப்பொழுது நன்றாக பிரஸ்சர் முழுவதும் இறங்கிய பின் பார்த்தால் பருப்பு நன்றாக கீழே படத்தில் உள்ளது போன்று வெந்து இருக்க வேண்டும்.
இது போன்று வேகவில்லை என்றால் பருப்பு ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். பாசிபருப்பு வேகவைத்த பின் அதே பாத்திரத்தில் வைக்காமல் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் 1 மேஜைகரண்டி நெய் சேர்த்து முந்திரிபருப்பை நன்றாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் மேலும் 2 மேஜைகரண்டி நெய் சேர்த்து எடுத்து வைத்து உள்ள கோதுமை மாவினை சேர்த்து பச்சை வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு வறுப்பட்ட பின் அதனுடன் வேகவைத்துள்ள பாசிபருப்பை சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாக கிளறிவிடவும். எடுத்து வைத்துள்ள நெய்யிலிருந்து 1 மேஜைகரண்டி சேர்த்துக் கொண்டால் பாசிபருப்பு கிளறுவதற்கு சுலபமாக இருக்கும்.
இப்பொழுது கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இதனுடன் பழுப்பு சர்க்கரையை சேர்த்து கட்டிதட்டாமல் நன்றாக கிளறிவிடவும்.
மீதமுள்ள நெய்யையும் சேர்த்து விடால் கிண்டிவிடவும்.
இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பினை சேர்க்கவும் இப்பொழு சேர்த்தால் தான் முந்திரி பருப்பு ஹல்வாவுடன் நன்றாக சேர்ந்து இருக்கும்.
தொடர்ந்து விடாமல் நாம் போட்ட நெய் பிரிந்து வரும்வரை அடுப்பை மிகவும் குறைவான தீயில் வைத்து கிளறி கொண்டுயிருக்கவும். படத்தில் உள்ளது போன்று நெய் பிரிந்து வந்தால் போதும். சட்டியில் ஒட்டால் சிறிது நெய் பிரந்து வரும்போது இறக்கிவிட வேண்டும்.
கையால் தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும் இது தான் சரியான பதம்.
இப்பொழுது ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறிய பின் மற்றொரு பாத்திரத்தில் உடனே மாற்றி வைக்கவும். அசோக ஹல்வா ஆரஆர நெய் மீண்டும் பிரிந்து மேலே வரும். அதிகமாக இருந்தால் தனியாக வடிகட்டி வைக்கலாம் இல்லையென்றால் அப்படியேவும் விட்டு விடலாம் அது உங்கள் விருப்பம்.
சுவையான சத்தான வாயில் போட்டவுடன் கரைய கூடிய அசோக ஹல்வா ரெடி!! நீங்கள் சாப்பிட ரெடியா!!!!!
இந்த பதிவு உங்களுக்கு விரும்பமுள்ளாதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்குShare செய்யவும். எமது Facebook page ஐ like செய்யவும். மேலும் மிகவும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.
Facebook page link : https://www.facebook.com/thamilshealthykitchen/
English blog link : https://selvisrecipes.blogspot.com/
Youtube channel link : UCRuCNqq2GP9o4ARSKGvct6A
0 கருத்துகள்