நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்/காரமணி சுண்டல்



இந்த காராமணி சுண்டல் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.  காராமணியில் அதிக அளவில் புரசத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது.

வீடியோ வடிவில் பார்க்கவேண்டுமென்றால் : https://www.youtube.com/watch?v=D4PyNgYgSKs&t=8s
   
தேவையான பொருட்கள் :

காராமணி  -  1 கப்

கடுகு  -  1/4 டீஸ்பூன்

பட்டை மிளகாய்  -  2

கருவேப்பிலை  -  சிறிதளவு

உப்பு  -  1/4 டீஸ்பூன்

தேங்காய் துருவல்  -  சிறிதளவு

செய்முறை :


காராமணியை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
















நன்றாக அலசிய மூடி போட்டு மூடிவைக்கவும்.  பின் இரவு முழுவதும் ஊற வைக்கவும் அல்லது குறைந்தது 8 மணி நேரமாவது ஊறவைக்கவும்.




மறுநாள் காலையில் காராமணி நன்றாக ஊறி இருக்கும். அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி வைத்துக்கவும்.






















  








 ஸ்டீமர் இருந்தால் எடுத்துக் கொள்ளவும் இல்லையென்றால் இட்லி பனையிலேயே வேகவைத்துக் கொள்ளலாம் கண்டிப்பாக குக்கரில் வேகவைக்க வேண்டாம் ஏனென்றால் இதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும்
      தண்ணீர் நன்றாக கொதித்த பின் இட்லி தட்டை போட்டு அதில் துணியை போட்டு பின் வடிகட்டி வைத்துள்ள காராமணியை சேர்க்கவும். பின் மூடி வைத்து மிதமான தீயில் வேகவைக்கவும்.


























































5 நிமிடத்திற்கு பின் அரை டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து கரைந்தவுடன் எல்லா காராமணியிலும் படும்படி தெளித்துவிடவும். பின்பு மூடி வைத்து மேலும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.



















10 நிமிடத்திற்கு பின் பார்த்தால் காராமணி பயிறு நன்றாக வெந்திருக்கும். மற்றொரு தட்டில் மாற்றி வைக்கவும். சூடாக இருப்பதால் கவனமாக எடுத்து வைக்கவும.


















ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, பட்டைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் வேகவைத்த காராமணியை சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.







துருவிய தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். 
















ஆரோக்கியமான சுவையான சத்துக்கள் நிறைந்த காராமணி சுண்டல் சூட சூட ரெடி!!!! இனி குழந்தைகளுக்கு ஸ்நாக் பாக்ஸில் இந்த மாதிரி சுண்டல் செய்து கொடுத்தால் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.















வீடியோ வடிவில் பார்க்கவேண்டுமென்றால் : https://www.youtube.com/watch?v=D4PyNgYgSKs&t=8s








கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)