சத்தான நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் சுவையான நெல்லிக்காய் சாதம் மறக்காமல் உங்கள் வீட்டில் இந்த சாதத்தை செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.
Video in nellikai satham click the link :https://www.youtube.com/watch?v=ftkX5wzQ9wQ
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 6 or 7
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 மேஜைகரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
வேர்கடலை - 1/4 கப்
பச்சைமிளகாய் - 1
நல்லெண்ணைய் - தேவைக்கேற்ப
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வேகவைத்த சாதம் - 1 cup (250ml அரிசியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை :
முதலில் நெல்லிக்காயை தண்ணீர்விட்டு நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும.
நெல்லிக்காயை அலசிய பின்னர் மிகவும் பொடியாக துருவிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
கடுகு முழுவதும் வெடித்த பின்பு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
கடலைப்பருப்பு வறுப்பட்டதும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்து தண்ணீர் அளவு குறைந்ததும் தாளித்த பொருட்களை சாதத்துடன் சேர்க்கவும்.
பின்பு அதே கடாயில் துருவி வைத்துள்ள நெல்லக்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதிக நேரம் வதக்க தேவையில்லை தேங்காய் சாதத்திற்கு தேங்காயை வதக்குவது போன்று வதக்கினால் போதும்.

சிறிது வதங்கியதும் அதனை சாதத்துடன் சேர்க்கவும்.
வேர்க்கடலையையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சிறிது நல்லெண்ணயை சேர்த்து எல்லா பொருட்களும் ஒன்றாக கலக்கும்படி கலந்துக் கொள்ளவும்.

மிகவும் சுவையான சத்தான விட்டமின் c சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம் ரெடி!!!!!!
0 கருத்துகள்