நவராத்திரி என்றாலே சுண்டல் மிகவும் முக்கியமான நெய்வேத்தியமாக இருக்கும். நவராத்திர் 9 நாட்களும் ஏதாவது ஒரு தானியத்தில் வெவ்வேறு விதமாக சுண்டல் செய்து சாமிக்கு படைத்து மற்றவர்களுக்கு வழங்கினால் மிகவும் நல்லது.
பச்சை பயிறை முளைக்கட்டிய பின் அதில் சுண்டல் செய்தால் மிகவும்
சிறந்தது.
வீடியோவாக பார்க்க விரும்பினால்
இந்த லிங்கை அழுத்தவும் : https://www.youtube.com/watch?v=tRgsC8JKLqA&t=287s
தேவையான பொருட்கள் :
பச்சை பயிறு - 1/2 கப்
பட்டை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சைபயிறை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக தண்ணீர் சேர்த்து தூசி மண் போக அலசிக்கொள்ளவும்.
8 மணி நேரம் நன்றாக ஊறிய பின் தண்ணீரை வடிக்கட்டி உதவிவுடன் நன்றாக வடிக்கட்டி வைக்கவும்.
(பகலில் ஊற வைத்து பின் இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீரை வடிக்கட்டி முளைக்கட்டவும்.)
மீதமுள்ள தண்ணீரை வடிகட்டியவுடன் ஹாட் பாக்ஸ் அல்லது ஏதாவது ஒரு மூடி போட்ட டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
இரவு முழுவதும் அல்லது 8 மணிநேரம் மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் அல்லது 8 மணிநேரத்திற்கு பின் திறந்து பார்த்தால் நீங்கள் கண்டிப்பாக ஆச்சிரியப்பட்டு போவீர்கள் ஏனென்றால் எல்லா பச்சை பயிறும் நன்றாக முளைத்து வந்திருக்கும்.
கீழே படத்தில் உள்ளது போல் முளைக்கட்டினால் போதும் அதிகமாக முளைத்து வந்துவிட்டால் அந்த முளைக்கட்டிய பயிறை சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும்.
மிகவும் முக்கியமான குறிப்பு முளைக்கட்டிய பச்சை பயிறில் அதிக அளவு பாக்டீரியாக்கள் இருக்கும் அதனால் கண்டிப்பாக இதனை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்த பின் மட்டுமே உண்ண வேண்டும்.
தண்ணீர்விட்டு அலசுவதால் அதில் உள்ள சத்துக்கள் கண்டிப்பாக குறையாது அதனால் நன்றாக அலசிய பின்பு பச்சையாகவோ அல்லது வேகவைத்து சுண்டால் செய்தோ சாப்பிடலாம்.
முளைக்கட்டிய பச்சை பயிறை நன்றாக அலசிய பின் இட்டிலி பானையில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்த பின் கீழே உள்ளது போல் தட்டு இருந்தால் உபயோக படுத்திக்கொள்ளவும் இல்லையென்னறால் நாம் தினமும் பயன்படுத்தும் இட்லி பானையில் உள்ள தட்டில் துணியை போட்டு பயன்படுத்திக் கொள்ளவும்.
எல்லா பச்சை பயிறிலும் படும்படி உப்பை தூவி மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
10 நிமிடத்திற்கு பின் முக்கால் பாகம் வெந்து இருக்கும்
பின் 1 டம்ளர் தண்ணீரை எல்லா இடத்திலும் படும்படி தெளித்து விடவும.
மேலும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
நன்றாக தோல் உரிந்து இதைப்போல் மலர வேகவைக்கவும்.
எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும் கடுகு வெடித்த பின் பட்டை மிளகாய் சேர்த்து வேகவைத்த பயிறையும் கருவேப்பிலையும் சேர்க்கவும் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். விரும்பம் இருந்தால் தேங்காய் தூருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான மிகவும் ஆரோக்கியமாக பச்சை பயிறு சுண்டல் ரெடி!!!
இந்த லிங்கை அழுத்தவும் : https://www.youtube.com/watch?v=tRgsC8JKLqA&t=287s
0 கருத்துகள்