சுவையான வவ்வால் மீன் வறுவல் செய்ய வேண்டும்மென்றால் கண்டிப்பாக இந்த முறையில் மீன் வறுவல் செய்து பாருங்கள்!!! சுவை அட்டகாசமாக இருக்கும் !!!!!
please click here & watch the video in tamil :https://www.youtube.com/watch?v=-5X607jwqnc
தேவையான பொருட்கள் :
வவ்வால் மீன் - 1 கிலோ
தனி மிளகாய்த்தூள் - 3 மேஜைகரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1/2 பகுதி
எண்ணெய் - 1 மேஜைகரண்டி
செய்முறை:
1. முதலில் மீனின் தோலை உரித்து பின்பு மெல்லிய துண்டுகளாக வெட்டி நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தில் தனிமிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு மற்றும் சோம்புத்தூள் சேர்க்கவும். (உங்கள் மிளகாய்த்தூள் காரமாக இருந்தால் 2 மேஜைகரண்டி மிளகாய்த்தூளும் 1 மேஜைகரண்டி மல்லித்தூளும் சேர்க்கவும்.
3. எலுமிச்சை பழச்சாறு பிழிந்துக் கொள்ளவும். இந்த எலுமிச்சை பழம் சேர்ப்பதால் மீனில் சிறிய புளிப்பு சுவையுடன் மிகவும் சுவை மிகுதியாக இருக்கும்.
4. தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து திக்கான மசாலாவாக கலந்துக் கொள்ளவும்.
5. ஒவ்வொரு மீன் துண்டுகளாக எடுத்து மசாலாவை நன்றாக தடவிக் கொள்ளவும். எல்லா மீன் துண்டுகளிளும் மசாலா தடவிய பின்பு 2 மணி நேரம் ஊற விடவும் இவ்வாறு செய்வதால் மீனில் மசாலா நன்றாக ஊறி இருக்கும்.

6. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு குறைவான தீயில் வைத்த வறுக்கவும். மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு 4 நிமிடத்திற்கு பின்பு திருப்பிவிடவும். மீணடும் 4 நிமிடங்கள் வேகவைக்கவும்.
7. நன்றாக பென்னிறமாக வறுப்பட்ட பின்பு எண்ணெயை வடிகட்டி மற்றொரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும.
9. சுவையான மீன் வறுவல் ரெடி!!! இந்த மீன் வறுவல் சாம்பார் மற்றும் ரசத்துடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
வீடியோவில் பார்க்க வேண்டுமென்றால் click here :
0 கருத்துகள்