பொதுவாக அந்தகாலத்தில் கருப்பு உளுந்தில் தான் பொடி செய்வார்கள் ஆனால் இன்று அநேக வீடுகளில் தோல் நீக்கிய உளுந்தில் தான் இட்லி பொடி செய்கிறார்கள் அதனால் தோலில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. கருப்பு உளுந்து வைத்து மிகவும் ஆரோக்கியமான ஒரு இட்லி பொடி செய்யலாம் வாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.
வீடியோ வடிவில் பார்க்க வேண்டுமென்றால்
Please click here : https://www.youtube.com/watch?v=uBbAur42v24
வீடியோ வடிவில் பார்க்க வேண்டுமென்றால்
Please click here : https://www.youtube.com/watch?v=uBbAur42v24
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 cup(250ml)
கடலைப்பருப்பு - 1/4 cup(60ml)
கட்டி பெருங்காயம் - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1/4 cup(60ml)
கட்டி பெருங்காயம் - சிறிதளவு
பட்ட மிளகாய்(வரமிளகாய்) - 10nos
கருவேப்பிலை - 1 கைப்பிடி
வெள்ளை எள் - 2 tbsp
பூண்டு - 2 nos(small size)
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 3/4tsp to 1 tsp(சுவைக்கேற்ப)
செய்முறை :
1. முதலில் கட்டி பெருங்காயத்தை 1 மேஜைகரண்டி எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.
2. பின்பு அதே கடாயில் கருப்பு உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் வெறும் கடாயில் குறைவான தீயில் வைத்து மொறு மொறு என்று சிறிது கலர் மாறும் வரை வறுக்கவும். இது நன்றாக வறுபட குறைந்தது 9 யிலிருந்து 10 நிமிடங்களாகும். 10 நிமிடத்தற்க பிறகு மற்றொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும.
3. கடலைப்பருப்புடன் 2 சொட்டு எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் வைத்து 4 நிமிடத்திற்கு பின் சிறிது கலர் மாறும் வரை வறுத்து பின்பு மற்றொரு தட்டில் கொட்டி வைக்கவும்.

4. மிளகாவை வெறு வாணலில் 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெள்ளை எள்ளையும் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
5. கருவேப்பிலையுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
6. எல்லா பொருட்களை தனிதனியாக வறுத்த பின் இது போன்ற ஒரு அகலமான ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
7. ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
9. அரைத்த பின்பு ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இது 1 மாதம் வரை நல்ல வாசணையுடன் இருக்கும்.
0 கருத்துகள்