Please click here&watch the video :https://www.youtube.com/watch?v=qSeRPl1Bxbk
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1
மஞ்சள்த்தூள் -1/4 tsp
மிளகாய்த்தூள் - 1 tsp
மல்லித்தூள் - 2 tsp
கடுகு - 1/4 tsp
எண்ணெய் - 3tbsp
உரித்த பூண்டு - 15 பல்
உப்பு - 1/2 tsp
செய்முறை :
1. முதலில் கைகள் இரண்டிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள் இவ்வாறு செய்வதால் வாழைக்காயின் கறை கையில் படுவதை தடுக்க முடியும்.
2. வாழைக்காயின் இரண்டு முனைகளையும் வெட்டிக்கொள்ளவும். பின்பு மேலே உள்ள பச்சை நிற தோலை கேரட் செதுக்கி அல்லது கத்திக் கொண்டு நீக்கிவிடவும்.
3. தோல் நீக்கிய பின்பு ஒரே தடிமன் வருபடி வட்டவட்டமாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை தண்ணீரில் அலசி உடனே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
4. பூண்டு உரித்ததை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் இடித்து எடுத்துக் கொள்ளவும். பூண்டு அதிகமாக சேர்ப்பதால் வாழைக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஏற்படும் வாய்வுத்தொல்லலை இருக்காது.
5. அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பின்பு கடுகு சேர்க்கவும்.
8. கடுகு பொறிந்த பின்பு அலசி வைத்து உள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
9. உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
10. இப்பொழுது இடித்து வைத்து உள்ள பூண்டு சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை தேவையெனில் எண்ணெய் சிறிது எண்ணைய் சேர்க்கவும்.
11. அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து அவ்வபொழுது கலந்து விடவும். வாழைக்காய் வேக குறைந்தது 10 நிமிடம் ஆகும்.
12. 10 நிமிடத்திற்கு பின்பு சுவையான மொறு மொறு வாழைக்காய் வறுவல் ரெடி!!! இந்த வறுவலை சாம்பார் சாதம், ரசம், எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
0 கருத்துகள்