பீட்ரூட் சப்பாத்தி(beet root chappathi)


😉குழந்தைகள் காய்கறிகள் என்றாலே சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி சப்பாத்தியுடன் சேர்த்து செய்து கொடுத்தால் கலர்புல்லாக இருப்பதால் 
உடனே சாப்பிட்டு விடுவார்கள் இது மிகவும்.
சுலமாக செய்ய கூடிய சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் சப்பாத்தி




தேவையான பொருட்கள் :



கோதுமை மாவு - 1 கப்
பீட்ரூட் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் - 5
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :


1.  முதலில் பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2.  பின் மிக்ஸியில் போட்டு மிகவும் சிறதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்                 கொள்ளவும்.

3.  பீட்ரூட்டை நன்றாக அரைத்த பின் அதனுடன் சோம்பு, பூண்டு மற்றும்                   பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக மெய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


4.  பின் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்றாக           கலக்கவும்.






5.  பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் விழுதை சிறிது சிறிதாக               சேர்த்து மாவுடன் நன்றாக பிசைந்துவிடவும்.




 

 6.  மாவு நன்றாக பிசைந்த பின் சிறு சிறு உருண்டைகளாக செய்துக்                              கொள்ளவும்.
7.  பின்பு சப்பாத்தி தி ரட்டும் கட்டை எடுத்து கொண்டு அதில் சிறிது மாவை               தூவி ஒவ்வொரு சப்பாத்தியாக திரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.











8. எல்லா சப்பாத்திகளையும் திரட்டி பின்பு ஒரு தோசை கல்லை சூடு செய்து
     ஒவ்வொரு சப்பாத்திகளாக சூடவும் சப்பாத்திகள் வெந்த பின் எண்ணெய்             தடவி எடுக்கவும்.





9.   சுவையான பீட்ரூட் சப்பாத்திகள் தயார் !! வெஜ் குருமா , சட்னி , அசைவ          குருமா சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பீட்ரூட் சப்பாத்தி செய்வது எப்படி வீடியோ :





கருத்துரையிடுக

0 கருத்துகள்