முட்டை அடை குழம்பு

தேவையான பொருட்கள் :

அடை செய்ய :

கடலைபருப்பு  -  1/2 கப்
துவரம்பருப்பு  -  1/2 கப்
முட்டை  -  3
சின்னவெங்காயம்  -  10
பூண்டு  -  5 பல்
கருவேப்பிலை  - சிறிதளவு
பட்டைமிளகாய் - 2
சோம்பு  -  1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்  - 1 டீஸ்பூன்

குழம்பு வைக்க :

புளி  -  எழுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்  -  2 டீஸ்பூன்
மல்லித்தூள்  -  1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்  -  1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல்  -  1/4 கப்
சோம்பு  -  1 டீஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு

தாளிக்க :

கடுகு  -  1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்  -  3 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி  -  1
எண்ணெய்  -  1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :


  • இரண்டு பருப்பையும் 1 மணிநேரம் ஊறவைத்து பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் , பூண்டு, கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கவும்.
  • அரைத்த விழுதுடன் முட்டை, மஞ்சள்த்தூள்,  நறுக்கிய வெங்காயம் , பூண்டு, கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தோசை கல்லில் சிறிது தடிமனான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
  • பின் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  • தேங்காய், சோம்பை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் , மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வைக்கவும்.
  • பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து அதில் புளி கரைசல் கலவை ஊற்றி கொதி வந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசணை போன பின் முட்டை அடை துண்டுகளை  சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
















 

கருத்துரையிடுக

0 கருத்துகள்