தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 1
இஞ்சிபூண்டு விழுது - 6 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
பொதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சிக்கன் பிரியாணி மசாலா - 2 டீஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சு இலை - சிறிதளவு
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
நெய் - 4 டீஸ்பூன்
பாதுமிதி அரிசி - 1/2 படி (2 கப்)
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை :
- சிக்கனை அலசி நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய்யை நீளவாக்கில் வெட்டவும். தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அரிசியை அலசி வடிகட்டி வைக்கவும்.
- குக்கரில் நெய்யிட்டு பட்டை,கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, சோம்பு பொடி போட்டு தாளித்து
- பின் வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதங்கியதும் பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசணை போக வதக்கவும்.
- தேவைப்படால் சிறிது எண்ணெய்யிட்டு மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா தூள் போட்டு சிறிது வதங்கியதும் சிக்கன், பொதினா சேர்த்து சுருள வதக்கவும்.
- பின் அரிசி, தயிர் போட்டு லேசாக வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை ழூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- முந்திரியை வறுத்து சேர்க்கவும், கொத்தமல்லி தழையால் அலங்கரித்து பரிமாரலாம்.
- சுவையான சிக்கன் பிரியாணி ரெடி
0 கருத்துகள்