தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 1/4 கிலோ
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
- முள்ளங்கியை சிறு சிறு சதுரதுண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு போட்டு வெடித்ததும், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பச்சை வாசணை போக வதக்கவும்.
- பின் முள்ளங்கியை சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
- முள்ளங்கி வெந்தவுடன் முட்டையை உடைத்து அதில் ஊற்றி முட்டை வேகும் வரை நன்றாக கிளறிவிட்டு இறக்கவும்.
முள்ளங்கி வாசணை பிடிக்காதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.
0 கருத்துகள்