உருளை கிழங்கு பொடிமாஸ்





தேவையான பொருட்கள் :


உருளை கிழங்கு  -  1/4 கிலோ

 உளுத்தம்பருப்பு  -  1 டீஸ்பூன்

கடுகு  -  1 டீஸ்பூன்

பெரியவெங்காயம்  - 1

பச்சைமிளகாய்  -  2

கருவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்துருவல் - 1/4 கப்

எண்ணெய்  -  1 டீஸ்பூன்

உப்பு  - தேவைக்கேற்ப

செய்முறை :



  • உருளை கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி லேசாக மசித்து  வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய்யை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பச்சை வாசணை போக வதக்கவும்.
  • இதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  • பின் தேங்காய்துருவல் சேர்த்து இறக்கவும்.


















 

கருத்துரையிடுக

0 கருத்துகள்