பீட்ருட் இனிப்பாக இருப்பதால் சைடிஸ்சாக சாப்பிட சிலருக்கு பிடிக்காது வறுவலாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சாம்பார், ரசத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்
தேவையான பொருட்கள் :
பீட்ருட் - 2
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
தேவையான பொருட்கள் :
பீட்ருட் - 2
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- பீட்ருட்டை தோல் சீவி கழுவி பின்னர் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- தேங்காய் துருவல் சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
- குக்கரில் பீட்ருட்டை தண்ணீர் உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெயிட்டு கடுகு வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி அதில் வேகவைத்த பீட்ருட் அரைத்த தேங்காய் விழுது , மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் தேவைப்பட்டால் சிறிது உப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தண்ணீர் வற்ற நன்றாக வறுத்து இறக்கவும்.
0 கருத்துகள்