தேவையான பொருட்கள் :
முட்டை - 2
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 மேசைகரண்டி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 டீஸ்பூன்
சோடாப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
- முட்டையை வேகவைத்து தோல் நீக்கி இரண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- முட்டை தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயல் வைத்து ஒவ்வொரு முட்டையாக எடுத்து மாவில் நன்றாக முக்கி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
0 கருத்துகள்