கலகலா














தேவையான பொருட்கள்  :

மைதா  -  1 கப்
வனஸ்பதி  -  1 மேசைகரண்டி
உப்பு  -  1/4 டீஸ்பூன்
ஜீனி  -  8 டீஸ்பூன்
தண்ணீர்  -  1/4 கப்
எண்ணெய்  -  பொரிப்பதற்கு












செய்முறை :

  • தண்ணீர்வுடன் ஜீனியை சேர்த்து மிதமான தீயில் ஜீனி கரையும் வரை வைத்து இறக்கி வைக்கவும்.
  • பின் மைதாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.  பின் வனஸ்பதியை சேர்த்து நன்றாக பிசைந்து ஆறிய ஜீர தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
  • 30 நிமிடத்திற்கு பிறகு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்தி போன்று தேய்த்து பின் கத்தியால் டைமன்ட் ஷேப்பில் வெட்டி மிதமான தீயில் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  •  கனமாக மாவு எடுத்து சப்பாத்தி செய்து  கட்டம் கட்டமாக வெட்டியும் பொரித்து எடுக்கலாம்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்