எலுமிச்சை சாதம்


 


தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம் -  2
மஞ்சள்த்தூள்  -  1 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
அரிசி  -  1 கப்

தாளிக்க :

கடுகு  -  1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு  -  1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்  -  2
கருவேப்பிலை  -  சிறிதளவு
எண்ணெய்  -  2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்  -  1/2 டீஸ்பூன்
வறுத்த கடலை  -  1 மேசைகரண்டி

செய்முறை :


  • அரிசியை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
  • எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து பின் எலுமிச்சை சாறு, மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் சாதத்துடன் கலக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்