பச்சை பயிறு பனியாரம்



தேவையான பொருட்கள் :

பச்சை பயிறு (அ) பாசி பருப்பு -  1 கப்
வெல்லம்  - 1/2 கப் (பொடித்தது)
அரிசி மாவு - 1/4 கப்
உப்பு  -  சிறிதளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு தேவையான அளவு
ஏலக்காய் பொடி  - 1 டீஸ்பூன்


செய்முறை :


  • பாசி பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  • இதனுடன் வெல்லம், அரிசி மாவு, உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறவும். இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
  • பின் ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு சூடானதும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் சிறிது சிறிதாக ஊற்றவும். பின் மிதமான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும.

கருத்துரையிடுக

0 கருத்துகள்