தக்காளி சாதம்/tomato rice/variety rice

 
 
 

தேவையான பொருட்கள் :

தக்காளி  -  3
பெரியவெங்காயம்  -  3
இஞ்சிபூண்டு பேஸ்ட்  - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்  -  4
பூண்டு பல்  -  5
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை,கிராம்பு,இலை,கசகசா - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசி - 1 கப் ( 1/4படி)
உப்பு - தேவைக்கேற்ப
வனஸ்பதி - 1 டீஸ்பூன்



செய்முறை :


  1. அரிசியை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் (அ) வடித்து உதிரி உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். சோம்பை லேசாக பொடித்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயிட்டு சோம்பு தூள், பட்டை, கிராம்பு, இலை, கருவேப்பிலை, வெங்காயத்தை போட்டு சிறிது வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனபின் தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்த்தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. வனஸ்பதியை சூடு செய்து சாதத்தில் ஊற்றி ஒரு கிளறு கிளரிய பின் வதக்கி வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும். பின் கொத்தமல்லி தூவி சாப்பிடலாம்.















 

கருத்துரையிடுக

0 கருத்துகள்