தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் - 3 கப்
வெல்லம் - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
பேரிச்சப்பழம் - 6
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து நன்றாக கொதிக்க விடவும். பின் ஓட்ஸையும் உப்பையும் சேர்த்து நன்றாக வேகவைத்து வெல்லம் சேர்த்து கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
பேரிச்சம்பழத்தை விதை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளா வெட்டி இதில் சேர்த்து சாப்பிடவும். தேவைப்பட்டால் நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்
பேரிச்சை மற்றும வெல்லம் சேர்ப்பதால் அயர்ன் சத்தும் மிகுதியாக உள்ளது. இதனை காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
0 கருத்துகள்