அசோகா அல்வா/ashoka halwa




தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
ஜீனி - 1 கப்
நெய் - 1/2 கப்
கேசரி பவுடர் - 1 பின்ச்
முந்திரி - 10
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை :


  • குக்கரில் பாசி பருப்பை 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும். விசில் எடுத்த பின் அடுப்பில் வைத்து கோதுமை மாவு, சிறிது நெய்  சோ்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். (தேவைப்பட்டால் சுடுதண்ணீர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம் )
  • நன்றாக கலந்த பின் ஜீனியை சேர்த்து நன்றாக கரையும் வரை கிளறி கேசரி பவுடர் சேர்த்து கலக்கவும்.
  • பின் ஒரு வாணலியில் நெய்யிட்டு முந்திரியை வறுத்து கொட்டவும், ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்