முட்டை பொரியல்




தேவையான பொருட்கள் :

முட்டை - 3
பெரியவெங்காயம் - 1 (அ) சின்னவெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :


  • வெங்காயம் , பச்சைமிளகாய் பொடி பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்த பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும். ( முட்டை உதிரி உதிரியாக வரும்வரை கிளறவும்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்