தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை ரவா - 1 கப்
ஜீனி - 1 கப்
கேசரி பவுடர் - 1 பின்ஞ்
தண்ணீர் - 3 கப்
நெய் - 1 மேசைகரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
- கோதுமை ரவாவை சிறிது நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கோதுமை ரவாவை சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாக கிளறவும்.
- ரவை வெந்தவுடன் ஜீனி சேர்த்து கரையும் வரை கிளறவும். கேசரி பவுடரை சிறிது தண்ணீரில் கலந்து சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
- பின் ஒரு வாணலியில் நெய்யிட்டு முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
ரவா - வில் கேசரி செய்வதை விட கோதுமை ரவையில் செய்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
0 கருத்துகள்