மீன் குழம்பு



தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ
புளி - எழுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 10
தக்காளி - 1
வெந்தயம் - 1 டீஸ்பூன்
நல்லஎண்ணெய் - 1 மேசைகரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு

அரைக்க :

தேங்காய் துருவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 3

செய்முறை :

  • புளியை சிறிது நேரம் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு வெந்தயம் தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன்  தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சுத்தம் செய்து வைத்த மீன் போட்டு வேகவைத்து கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். (அதிக நேரம் மீனை வேகவைக்க வேண்டாம் கரைந்துவிடும்)

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்