நண்டு தொக்கு




தேவையான பொருட்கள் :

நண்டு - 1/2 கிலோ
பெரியவெங்காயம் - 4
பூண்டு - 1
தக்காளி - 4
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :


  • வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு இவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • நண்டை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். 
  •  இதனுடன் நண்டு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், உப்பு  சிறது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்