தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - 200 கிராம்
துருவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பட்டைமிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- பீன்ஸை பொடி பொடியாக வெட்டிக் கொள்ளவும். பின் பீன்ஸ் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து வைத்துக்கொள்ளவும்.
- துருவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி இரண்டு பருப்பையும் சோம்பு, மஞ்சள்த்தூள், உப்பு மற்றும் பட்டைமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். (இதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்)
- அரைத்து விழுதை ஒரு இட்லிதட்டில் வைத்து வேகவைத்து எடுத்து ஆறியதும் உதிர்த்து விடவும் (அ) மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து பீன்ஸ் மற்றும் உதிர்த்த பருப்பு சேர்த்து இறக்கவும்.
இதில் பீன்ஸ்க்கு பதிலாக கொத்தவரங்காய் , வெண்டக்காய் மற்றும் புடலங்காய் ஏதாவது ஒரு காய் சேர்த்து செய்யலாம்.
0 கருத்துகள்