உருளைகிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு  -  2
மிளகாய்தூள்        -  1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள்          -  2 1/2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்       -  1/2 டீஸ்பூன்
கடுகு                        -  1 டீஸ்பூன்
கருவேப்பிலை     -  சிறிதளவு
எண்ணெய்              -  2 மேசைகரண்டி

செய்முறை :

  • உருளை கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.

  • ஒரு வாணெலியில் எண்ணெய்யிட்டு காய்ந்ததும் கடுகு போட்டு கடுகு வெடித்தவுடன் உருளைகிழங்கை போட்டு தண்ணீர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து கருவேப்பிலை தூவி இறக்கவும்.



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்