முருங்கைகீரை சாம்பார்

தேவையான பொருட்கள் :

முருங்கைகீரை - 1 கட்டு

சின்னவெங்காயம்  -  10

பச்சைமிளகாய்  -  4

புளி  -  நெல்லிக்காய்யளவு

துவரம்பருப்பு  -  1 கப்

மிளகாய்தூள்  - 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள்  - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள்  - 1/2 டீஸ்பூன்

தக்காளி  - 1/2

தேங்காய்  -  3 பத்தை

சோம்பு  - 2 டீஸ்பூன்

கடுகு  -  1 டீஸ்பூன்

எண்ணெய்  -  2 டீஸ்பூன்

உப்பு  - தேவைக்கேற்ப


 செய்முறை :


  • துவரம்பருப்பை குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.  வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டாக கீறி வைத்து கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

  • தேங்காய், சோம்பு சேர்த்து அரைக்கவும்.  புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.

  • பின் ஒரு கடாயில் தண்ணீர், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

  • ஒரு கொதிவந்ததும் உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.  பின் வேகவைத்து பருப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன்.  முருங்கைகீரை போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு தாளித்து கொட்டவும்.



































 

கருத்துரையிடுக

0 கருத்துகள்