புளி குழம்பு





தேவையான பொருட்கள் :


புளி  -  எழுமிச்சையளவு

சின்னவெங்காயம்  -  6

முருங்கைகாய்  -  1

சேப்பங்கிழங்கு  - 4

மிளகாய்தூள்  -  1 டீஸ்பூன்

மல்லித்தூள்  -  2 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் -  1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் -  1/4 கப்

சோம்பு  - 2 டீஸ்பூன்

வெந்தயம்  -  1 டிஸ்பூன்

நல்லணெய்  - 1 மேசைகரண்டி

கருவேப்பிலை  - சிறிதளவு


செய்முறை  :


  • புளியை சிறிது நேரம் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.  சின்னவெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். 

  • சேப்பங்கிழங்கை அலசி தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து  தோல் நீக்கி கொள்ளவும்.  தேங்காய் துருவல் மிக்ஸியில் போட்டு அரைத்து  எடுப்பதற்கு முன் சோம்பு சேர்த்து இரண்டு சுத்து சுற்றி எடுக்கவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு வெந்தயம், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்த வதக்கவும்.  பின் புளி கரைசலை ஊற்றி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றம் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  • கொதிவந்தவுடன் முருங்கைகாய், சேப்பங்கிழங்கு, தேங்காய் அரைத்த விழுது நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.

















 

கருத்துரையிடுக

0 கருத்துகள்