அகத்திக்கீரை குழம்பு





தேவையான பொருட்கள் :


அகத்திக்கீரை  -  1 கட்டு

அரிசி கலைந்த தண்ணீர் - 4 கப்

சின்னவெங்காயம்  - 10

பூண்டு  - 4 பல்

பச்சைமிளகாய் - 2

தக்காளி  - 1/2

மிளகாய்தூள்  - 1 டீஸ்பூன்

மல்லித்தூள்  -  2 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள்  - 1/2 டீஸ்பூன்

உப்பு  -  தேவைக்கேற்ப

தாளிக்க :

கடுகு  -  1 டீஸ்பூன்

எண்ணெய்  - 2 டீஸ்பூன்

அரைக்க :

தேங்காய்துருவல் - 1/2 கப்

சோம்பு - 2 டீஸ்பூன்

செய்முறை :


  • அரிசி கலைந்து 2,3 வது தண்ணீர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் 4 வது தண்ணீர் கீரையை அலச வைத்துக்கொள்ளவும்.

  • வெங்காயத்தை இரண்டாக வெட்டவும், தக்காளி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும், பச்சைமிளகாய் இரண்டாக கீரி வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு கடாயில் அரிசி கலைந்த தண்ணீரில் அலசிய கீரை, வெங்காயம், தக்காளி,  பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.

  • சிறிது கொதித்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.

  • பின் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்ப சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு போட்டு தாளித்து கொட்டவும்.
 
 
 
Note  :   வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இரத்தத்தில் உள்ள நச்ச பொருட்களை நீக்க கூடியது.
 
 
 
 
 
 
 
 




 

கருத்துரையிடுக

0 கருத்துகள்